Friday, November 02, 2007

சத்தம் போடாதே...

Commentary by Dinesh..one of my Verizon friends..

வழக்கமான காதல்/Action/Comedy மசாலா இல்லாமல் ஆந்திராவில் நடைபெற்ற சமுக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உண்மை சம்பவத்தை திரையில் பார்க்க வேண்டுமா ? - Go for "சத்தம் போடாதே"

குடி பழக்கத்தால் ஆண்மை இழந்த கணவனாக "Chennai 28" Nitin Sathya, அவரின் இளம் மனைவியாக பத்மப்ரியா ஆசைப்படி குழந்தையை தத்து எடுக்க முதலில் சம்மதிக்கிறார். நாளடைவில் தன் தாழ்வு மனப்பான்மை மற்றும் குற்ற உணர்ச்சி காரணமாக ஒரு நாடகமாடி குழந்தையாய் மீண்டும் ஆசிரமத்தில் விட்டு விடுகிறார். குழந்தையை மறக்க வேலைக்கு செல்லும் பத்மப்ரியவை சந்தேகப்பட்டு சித்திரவதை செய்கிறார். இது பொறுக்க முடியாமல் சத்யாவை விவாகரத்து செய்கிர்ரர் பத்மப்ரியா.
நொடிந்து போன பத்மப்ரியா வாழ்கையில் தன் அண்ணனின் நண்பரான ப்ரிதிவ்ராஜ் நுழைகிறார். ப்ரிதிவ்ராஜ் பத்மப்ரியவைய் திருமணம் செய்கிறார். இந்நிலைஇல் முதல் கணவனான சத்யா இவர்கள் வாழ்கையில் நுழைய இடைவேளை.
இடைவேளை வரை முதலில் சோகமாக பிறகு கலகலப்பாக நகரும் படம் பிறகு "Thriller" அக மாறுகிறது. சத்ய பத்மப்ரியவை கடத்திவிட்டு "Gas" வெடித்து இறந்தது போல் "Setup" செயும்ம் காட்சி வசந்த் தன் முந்தைய படமான "ஆசை" நினைவுட்டுகிறது.
ப்ரிதிவ்ராஜ் எப்படி பத்மப்ரியவை மீட்கிறார், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட சத்யா என்ன ஆகிறார் என்பதை தன் வழக்கமான ச்வாரச்யத்துடன் சொல்லிஇருக்கிறார் வசந்த்.
பாடல்கள்.."அழகு குட்டி செல்லம்.." பாடலில் குழந்தையின் 100 விதமான சிரிப்பை பதிய வைத்து நம் தொலைந்த முகங்களை முன் நிறுத்துகிறார்.ஒரு பெண்ணின் உச்சகட்ட சோகம் மற்றும் சந்தோசத்தை "பேசுகிறேன் பேசுகிறேன்.." என்ற ஒரே பாடலை இரு வேறு காட்சி அமைப்பில் நிறுத்தி இயக்குனர் கைதட்டல் பெறுகிறார். மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு எடுக்கப்பட்ட கதையில் இடைவேளைக்கு பிறகு வரும் 2 பாடல்கள் - மொக்கை :-(
வசனம்.."என் தங்கச்சி வேணும்னா உங்களா இன்னும் Divorce பண்ணாம இருக்கலாம், ஆனா நான் உங்கள எப்போவோ Divorce பண்ணிடன்" - பத்மப்ரியா அண்ணன் சொல்லும் காட்சி "Super"அண்ணன் - "எதற்காக அவன Divorce பண்ண maatree?பத்மப்ரியா - "அவர் எதையுமே என்கிட்டேந்து marachadhille டா, அதான் அவர விட்டு வரமுடியலே" என்னும் காட்சி நிஜ வாழ்கையில் சில குடும்பங்களில் உள்ள நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக உள்ளது. Divorce ஆகி பிறந்த விட்டுக்கு வரும் பத்மப்ரியாவாய் பார்த்து அப்பா பேசும் வசனம் "சரியா விசாரிக்காம உண்ண அவனுக்கு கட்டி கொடுதுடேநேமா" - பெற்றோருகளுக்காக....Climax கட்சிக்காக "Cameraman" க்கு ஒரு "ஒ" போடலாம் - அருமையான frames.
உளவியல் ரீதியாய்க பாதிக்கப்பட்டவரின் செயல்பாட்டை நேர்த்தியாக திரையில் நிறுத்திஇருக்கிறார் வசந்த்.

சத்தம் போடாதே - Emotional pot-boiler.

தினேஷ்.